பிரம்மாண்டமாக உருவாகவிருந்த கர்ணன் பட கிளைமாக்ஸ் காட்சியில் மாற்றமா! வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்!

பிரம்மாண்டமாக உருவாகவிருந்த கர்ணன் பட கிளைமாக்ஸ் காட்சியில் மாற்றமா! வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்!


Climax scene will change in thanush karnan movie

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்துள்ளார். மேலும், அவர்களுடன் லால்,யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக தற்போது  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

Karnan

மேலும் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு முக்கியமாக கர்ணன் பட கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்படவுள்ளது. இதற்காக  பல வீடுகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் க்ளைமாக்ஸ் காட்சிக்கு 500க்கும் மேற்பட்ட நபர்கள்  தேவைப்படும் நிலையில் தற்போது உள்ள இக்கட்டான சூழலில் அது சாத்தியமில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் எண்ணுவதாகவும், அதனால் கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.