கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
விஜய் மில்டனுடன் இணையும் நடிகர் ஷாம்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனரானவர் விஜய் மில்டன். இவர் கோலிசோடா, கடுகு, 10 எண்றதுக்குள்ள, கோலிசோடா 2, போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.
தமிழ் சினிமாவில் 12 பி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் ஷாம். அதனைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, இயற்கை, போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் வில்லனாகவும் சில படங்களில் நடித்து வந்தவர். இவர் காவல்துறை அதிகாரியாக நடித்த பொறம்போக்கு என்னும் பொதுவுடமை என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜயின் வாரிசு படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஷாம் நடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இத்திரைப்படத்தில் அவருடன் ரம்யா நம்பீசன், கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்திற்கான பெயர் மற்றும் வேறு எந்தெந்த நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான 'மழை பிடிக்காத மனிதன்' என்ற திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் பாக்கியிருப்பதால் விரைவில் இந்தத் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறைய திறமைகள் இருந்தும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் ஷாம். இந்த புதிய படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.