இத்தனை வருடங்கள் ஆகியும் அஜித் சார் அத மறக்கல! உருகும் பிரபல நடிகை!

இத்தனை வருடங்கள் ஆகியும் அஜித் சார் அத மறக்கல! உருகும் பிரபல நடிகை!


cinema-actress-sujatha-talks-about-thala-ajith

சினிமாவை பொறுத்தவரை தல அஜித் என்றாலே அனைவராலும் மிகவும் மதிக்கப்பட கூடியவர். ரசிகர்களையும் தாண்டி அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் கூட அஜித் என்றால் தனி மரியாதை கொடுப்பார்கள். அந்த அளவிற்கு அனைவரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் பழகுபவர் தல அஜித். இதனால்தான் என்னவோ கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் அஜித். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷூட்டிங் முடிந்த கையோடு தனது குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் தல அஜித்.

Veeram

இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ளார் பிரபல நடிகை சுஜாதா. நான் அஜித்துடன் கடைசியாக வீரம் படத்தில் நடித்திருந்தேன். அந்த படம் வெளிவந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.நான் இப்போது அவருடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளேன். இருந்தாலும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பார்த்த அஜித் சார் என்னுடைய பசங்களை இன்றும் ஞாபகம் வைத்து கொண்டு அவர்களை பற்றி விசாரித்தார்.

மேலும் வீரம் படம் ஷூட்டிங் நடக்கும்போது எனது பசங்கள் பள்ளியில் படித்து கொண்டிருந்தார்கள். தற்போது அவர்கள் கல்லூரிக்கு சென்று விட்டார்களா என நிஞாபகம் வைத்து கேட்டுள்ளார் தல அஜித். இத்தனை வருடங்கள் ஆகியும் இதெல்லாம் மறக்காமல் அஜித் சார் என்கிட்ட கேட்டது மிகவும் பெருமையாக இருப்பதாக சுஜாதா கூறியுள்ளார்.