இந்திய சினிமாவின் புதிய மைல்கல்! 2.0 பற்றி திரை பிரபலங்களின் கருத்து

இந்திய சினிமாவின் புதிய மைல்கல்! 2.0 பற்றி திரை பிரபலங்களின் கருத்து


cine actors about 2.0

தமிழ் சினிமாவை உலக அளவில் தலைநிமிர வைத்த பெருமை 2.0 வை சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கற்பனையால் கூட எட்டி பிடிக்கமுடியாத காட்சிகள். இதெல்லாம் எப்படி செய்தார்கள் என வியக்க வைக்கும் விஎப்எக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது சங்கரின் 2.0 திரைப்படம்.

 2.0 படத்தை பார்த்த அனைவரும் "இது பிரம்மாண்டத்தின் உச்சம்; தமிழ் சினிமாவை ஹாலிவுட் அளவிற்கு உயர்த்திவிட்டார் இயக்குனர் சங்கர், ரஜினி மற்றும் அக்சய் குமார் நடிப்பு வேற லெவல்" என புகழாரம் சூட்டி வருகின்றனர்.

cine actors about 2.0

அந்த வகையில் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் 2.0 படத்தை பற்றி என கருத்து கூறியிருக்கிறார்கள் என்பதை பாப்போம்.

கார்த்தி: 2.0 படம் மிகப்பெரியத்திலும் மிகப்பெரியது என கூறியுள்ளார்.அனிருத்: 2.0 படம் உலகளவில் ஒரு புதிய அனுபவம். இந்திய பாக்ஸ் ஆஃபீஸின் அணைத்து சாதனைகளையும் திருத்தி எழுத வேண்டிய நேரம் இது. தலைவர் ரஜினிகாந்த், மாஸ்டர் சங்கர், அக்சய் குமார், ரஹ்மான், லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ், எமி ஜாக்சன் அனைவர்க்கும் தலைவணங்குகிறேன். மீண்டும் இன்னோருமுறை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது என கூறியுள்ளார்.கார்த்திக் சுப்புராஜ்: தலைவர் வெறித்தனம். திரையில் அனல் பறக்க விடுகிறார் தலைவர். இயக்குனர் சங்கரின் ஒட்டுமொத்த அணியும் மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இந்திய சினிமாவில் ஒரு புதிய மையில்கல்லை தொட்டிருக்கும் இந்த படத்தை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.வெங்கட் பிரபு: என ஒரு அருமையான வியூகம். மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. மிக்க நன்றி. அடுத்து 3.௦ வுக்காக காத்திருக்கிறேன்.KV ஆனந்த்: 2:30 மணிநேரம் நம்மை மெய்மறக்க வைக்கிறது 2.0. இயக்குனர் சங்கரின் மிகசிறந்த படம் இது.