சினிமா

ஓய்.. திருமணமான பேச்சுலரே! பணப்பெட்டியுடன் வெளியேறிய சிபி! அவரது மனைவி கூறியதை பார்த்தீர்களா!!

Summary:

ஓய்.. திருமணமான பேச்சுலரே!பணப்பெட்டியுடன் வெளியேறிய சிபி! அவரது மனைவி கூறியதை பார்த்தீர்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடனும் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் பணப்பெட்டி டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லலாம்.

இந்த நிலையில் முதலில் 3 லட்சம் பணம் அறிவிக்கப்பட்டது.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12லட்சம் வரை பிக்பாஸ் பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிபி பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் சிபியின் மனைவி ஸ்லோகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வழக்கமாக நான் உன்னை பாராட்ட மாட்டேன். ஆனால், தற்போது சந்தோஷத்தில் பூரித்துபோயிருக்கிறேன். உன்னை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நீ தலை நிமிர்ந்து வெளியில் வந்து இருக்கிறாய். ஓய் திருமணமான பேச்சுலரே வீட்டுக்கு வந்து எனக்கு டீயும் ஆம்லெட்டும் போட்டு குடு என பதிவிட்டுள்ளார்.

 

 

 


Advertisement