வெளியான மற்ற படங்களை விட இவ்வளவு கோடி வசூலா? அதிர வைத்துள்ளது சினிமா களத்தையே.!

christmax release movie kgf 113 crores collect


christmax-release-movie-kgf-113-crores-collect

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படம் மற்ற படங்களை விடவும் அதிக வசூலை குவித்துள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட கேஜிஎஃப் படத்தை விஷால் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி கனா, சிலுக்குவார் பட்டி சிங்கம், மாரி 2 , அடங்க மறு போன்ற படங்கள் வெளியாகின. அவைகளுள் ஒன்றாக கேஜிஎஃப் படமும் வெளியானது. 

பண்டிகை நேரம் என்பதால் துவக்கத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்சமயம் அன்று வெளியான மற்ற படங்களை விட அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளியான 7 நாட்களில் இப்படம் ரூ.113 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.150 கோடி வசூல் கொடுக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.