தொகுப்பாளினி டிடி கேட்ட அந்த ஒரு விஷயம்! அடுத்த நொடியே அசத்தலாக செய்த பிரபல நடிகர்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

தொகுப்பாளினி டிடி கேட்ட அந்த ஒரு விஷயம்! அடுத்த நொடியே அசத்தலாக செய்த பிரபல நடிகர்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!



Chiyaan vikram take picture with anger DD

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல முன்னணி பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார். இவரது கலகலப்பான பேச்சிற்கு, சிரிப்பிற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்று வரும் மகான் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் நடிகர் விக்ரமிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? என கேட்டுள்ளார். உடனே விக்ரம் டிடி அணிந்திருந்த உடைக்கு மேட்ச்சாக கருப்பு உடை வரவழைத்து அணிந்து கொண்டு அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை டிடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.