இந்தியா சினிமா

50 வருட காத்திருப்பு! உச்சகட்ட பரவசத்துடன் சின்னக்குயில் சித்ரா எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Summary:

chitra went to sabarimalai temble

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தவர் பாடகி சித்ரா. இவரது கணவர் விஜயசங்கர். இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு  பெண் குழந்தை பிறந்தது.  நந்தனா என பெயரிட்ட அந்த குழந்தையை அவர்கள் மிகவும் சந்தோசமாக வளர்த்து வந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு துபாயில்  நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது.

 இது சித்ராவிற்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ரசிகர்களும் அவருக்காக பெருமளவில் வருந்தினர். ஆனாலும் அதன்பிறகு சித்ரா தனது மகள் நினைவாக தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் சபரிமலை அய்யப்பனை தரிசனம் 10 முதல் 50 வயதுகுட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் அணைத்து வயதினரையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் அது நடைமுறைப்படுத்த படுத்தப்படவில்லை. மேலும் சபரிமலைக்கு செல்லும் பல பெண்க திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் பாடகி சித்ரா 50 வயது கடந்த நிலையில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார்.மேலும் அங்கு அவர் பரவசத்துடன் ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 


Advertisement