தற்கொலைக்கு முன் சித்ரா கடைசியாக போனில் பேசியது இவரிடம்தானா! என்னதான் பேசினார்? வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

தற்கொலைக்கு முன் சித்ரா கடைசியாக போனில் பேசியது இவரிடம்தானா! என்னதான் பேசினார்? வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!


chitra-talked-her-father-in-law-before-she-commited-sui

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். 

இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  இந்நிலையில்  நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து போலீசார் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் ஹேமந்த் தூண்டுதலால்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும் சித்ராவின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த நிலையில் அதில் சில பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த அழிக்கப்பட்ட ஆடியோவை மீட்ட நிலையில் சித்ரா இறுதியாக அவரது மாமனார் ரவிச்சந்திரனுடன் பேசியிருப்பது தெரியவந்தது. 

chitra

அப்பொழுது சித்ரா தனது மாமனாரிடம், தனக்கும் ஹேமந்திற்கும் ஏற்பட்ட சண்டைகள், மேலும் அவர் தன்னை தரக்குறைவாக பேசுவது குறித்தும் ஒன்று விடாமல் சொல்லியுள்ளார். மேலும் ஊரறிய இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அவர் இப்படி செய்வது சரியில்லை எனவும் கூறி கதறி அழுதுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.