ட்ரைலர பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.! அந்த படத்தில் என் மகள் சொன்ன அந்த வார்த்தை.! கண்ணீருடன் சித்ராவின் தாய்.!

ட்ரைலர பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.! அந்த படத்தில் என் மகள் சொன்ன அந்த வார்த்தை.! கண்ணீருடன் சித்ராவின் தாய்.!


chitra-mom-talk-about-her-daughter-movie

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சித்ரா மரணத்திற்கு முன்பு முதலும், கடைசியுமாக நடித்த திரைப்படம் கால்ஸ். ஜெய் சபரிஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆர் சுந்தர்ராஜன், வினோதினி, தேவதர்ஷினி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைக் கண்ட ரசிகர்கள் இந்த திரைப்படமும், சித்ராவின் வாழ்க்கையும் ஒத்துப்போவதாக கூறிவந்தனர். மேலும் இத்திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வர தயாராக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் 2 மில்லியன் வியூஸைத் தாண்டிச் சென்று உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

chitra

இந்தநிலையில் சித்ராவின் தாய் பேசுகையில், சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் மகளின் கனவு. சீரியலில் நடிக்க ஆரம்பிச்சவுடனேயே சினிமாவுல நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வந்தது. அப்படித்தான் கால்ஸ் படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. எனது மகளின் மறைவுக்கு பிறகு, அப்படத்தின் இயக்குநர் எங்கள் வீட்டுக்கு வந்து படத்தோட ட்ரைலரை காண்பித்தார்.

அந்த ட்ரைலரின் இறுதியில், அந்த ஆள் மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா. நானும் இந்த உலகத்துல ஒரு சராசரி மனுஷியா வாழ்ந்திட்டிருப்பேனோ என்னவோ? என்று எனது மகள் அழுதுகொண்டே சொல்வதை பார்த்து நாங்கள் கண்ணீர் விட்டு அழுதோம். அந்த படத்தில் சித்ரா நடிக்கும்போது, நாமெல்லாம் ஒன்றாக சென்று இந்த படத்தை பார்க்கலாம் என்று அடிக்கடி கூறுவாள். ஆனால் தற்போது சித்ரா இல்லாமல் படத்தை பார்க்க முடியும்னு நினைத்துக்கூட பார்க்கமுடியல என தெரிவித்துள்ளார்.