பாண்டியன் ஸ்டோர் சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஹோட்டல் ரூமில் அவரும் இருந்தாரா? நடந்தது என்ன? அதிர்ச்சி பின்னணி!

பாண்டியன் ஸ்டோர் சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஹோட்டல் ரூமில் அவரும் இருந்தாரா? நடந்தது என்ன? அதிர்ச்சி பின்னணி!


chitra-husband-hemanth-said-about-her-suicide

 பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையில் விஜய் டிவியின் ஒரு ஸ்பெஷல் ஷோ ஷூட்டிங் நேற்று சென்னையின் புறநகர்ப்பகுதியான நசரத்பேட்டையில நடந்துள்ளது. அதனை முடித்துவிட்டு அவர் இரவு நேரமானதால் அருகிலிருந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த நிலையில் இரவு நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Hemanth

மேலும் நேற்று சித்ராவுடன் அவரது வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பொழுது அவர், நேற்று நள்ளிரவில் ஷூட்டிங் முடிந்து ரூமுக்கு திரும்பிய சித்ரா குளிக்கப்போகிறேன், நீங்க ரூம்க்கு வெளியே இருங்கள் என கூறினார். நானும் வெளியே காத்திருந்தேன். ஆனால், வெகுநேரமாகியும் சித்ரா கதவை திறக்கவில்லை. அதனால் சந்தேகம் அடைந்து  ஓட்டல் நிர்வாகிகளிடம் மாற்று சாவி பெற்று கதவை திறந்தேன். அங்கு சித்ரா தூக்கில் தொங்கியவாறு இருந்தார். அதனை  கண்டு தான் பேரதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.