மறைந்த நடிகை சித்ராவிற்கு வீட்டில் இதெல்லாம் செய்யுறாங்களா!! இப்படி பார்க்கமுடியலையே.. கண்கலங்கும் ரசிகர்கள்!!

மறைந்த நடிகை சித்ராவிற்கு வீட்டில் இதெல்லாம் செய்யுறாங்களா!! இப்படி பார்க்கமுடியலையே.. கண்கலங்கும் ரசிகர்கள்!!


chitra-dead-second-month-anniversary-photo-viral

நடிகை சித்ரா இறந்து இருமாதங்கள் ஆனநிலையில் அவரது குடும்பத்தினர்கள் அவருக்கு சாமி கும்பிட்டுள்ளனர்.

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அவர் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சியிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் அவரது  வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த ஆண்டு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் தற்போது பிப்ரவரி  மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.  இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த்தான் காரணம் என போலீசார் அவரை கைது செய்தனர்.

chitra

இந்நிலையில் சித்ரா இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் சமீபத்தில் அவரது குடும்பத்தினர் சித்ராவின் பெரிய உருவப் படத்தை வைத்து, மாலையிட்டு வழிபட்டுள்ளனர். இத்தகைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் சித்ரா உங்களை இப்படி பார்க்க முடியவில்லையே என கண்கலங்கியுள்ளனர்.