ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சித்தி சீரியல் மீண்டும் வருகிறதா! சந்தோசத்தில் ரசிகர்கள்.Chithi serial

இன்று மக்கள் திரையைத் தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர், நடிகைகளை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் படத்தைவிட பிரம்மாண்டமாக சீரியலை தயாரித்து வருகின்றனர். அதிலும் மக்களின் ரசனைக்கு ஏற்றார்போல் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

அதைப்போல் ஒரு காலகட்டத்தில் இரவு ஒன்பதரை மணி அனைவரையும் தொலைக்காட்சியின் முன்பு உட்கார வைத்த சீரியல் தான் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார்.

Chithi serial

மேலும் ராதிகாவை வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையிலும் ஜொலிக்க வைத்தது இந்த சீரியல். இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சித்தி 2 சீரியலை கே. விஜயன் இயக்கவுள்ளதாகவும், ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, டோனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.