சினிமா

நான் பார்த்து மிகவும் வியந்த மனிதர் அஜித்தான்.! புகழ்ந்து தள்ளிய மாபெரும் ஸ்டார்! செம உற்சாகத்தில் தல ரசிகர்கள்!!

Summary:

chiranjeevi talk about ajith

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்க பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும்  ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார். பெண்கள் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிரஞ்சீவி. ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது சைரா என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் பிரபல வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவரிடம் சமீபத்தில் நீங்கள் பார்த்து வியந்த நடிப்பு, படம் எது என கேள்வி கேட்டதற்கு, எனக்கு நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது.மேலும் வேதாளம், விஸ்வாசம் என அவரது அனைத்து படங்களையும் மிகவும் ரசித்துப் பார்க்கிறேன்.மேலும் அஜித்  தொடர்ந்து சிறப்பான பல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருமை என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement