சினிமா

உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்காக.. நடிகர் சிரஞ்சீவி செய்த அசத்தல் காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!

Summary:

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெருமளவில் தீவிரமாக பரவி வருகிறது. மே

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெருமளவில் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை உயிரிழக்கும் துயரமும் நேர்ந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதனால் வருமானமின்றி கஷ்டப்படுவோருக்கு பல திரைப்பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் வங்கி ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு உதவி வருகிறார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் தேவைப்படுவோர் அவரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Advertisement