மறைந்த தன் அப்பாவின் போட்டோவை தொட்டுதொட்டு விளையாடும் பிரபல நடிகரின் மகன்! கண்கலங்கவைக்கும் வீடியோ!

மறைந்த தன் அப்பாவின் போட்டோவை தொட்டுதொட்டு விளையாடும் பிரபல நடிகரின் மகன்! கண்கலங்கவைக்கும் வீடியோ!


chiranjeevi-sarja-son-video-viral

கன்னட சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து,முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது  35 வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா. கணவர் இறந்த போது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். 

மேக்னாவும் நடிகையாவார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் அவரது உறவினர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அண்மையில் கூட குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவுற்றதை விழாவாக கொண்டாடினர்.

இந்த நிலையில் மேக்னா அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் ஜூனியர் சிரு என செல்லமாக அழைக்கும் தனது குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் ஜூனியர் சிரு தனது அப்பாவின் புகைப்படத்தை தொட்டுப் பார்த்து சிரித்து விளையாடுவதை போன்ற வீடியோவை மேக்னா வெளியிட்டுள்ளார். அது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.