சினிமா

இறப்பதற்கு இருதினங்களுக்கு முன்பே வந்த அறிகுறி! அசால்டாக இருந்த பிரபல நடிகர்! வெளியான பகீர் தகவல்கள்!

Summary:

Chiranjeevi ignore chest pain before 2 days of dead

கன்னட சினிமாவின் பழம்பெரும் நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகன் ஆவார். சிரஞ்சீவி சார்ஜா 4 வருடங்களாக அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்துவந்தார். பின்னர் அவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  ஹீரோவாக அறிமுகமானார்.

அதனைதொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி சார்ஜா பல படங்களில் நடித்துள்ளார்.  அவர் கடந்த 10ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை  மேக்னா ராஜை கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் பல மலையாளம் மற்றும்  கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். 

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இறப்பதற்கு இருதினங்களுக்கு முன்பே சிரஞ்சீவிக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது எனவும், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர் வாயு தொல்லையாக இருக்கலாம் என முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு சாதாரணமாக விட்டுவிட்டார் எனவும்  தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அப்பொழுதே அவர் மருத்துவமனைக்கு சென்றிருந்தால் அநியாயமாக உயிரிழந்த இருக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement