சினிமா

அடேங்கப்பா! விஜய் சேதுபதி பட நடிகைக்கு அவரது பெரியப்பா மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்ன பரிசு கொடுத்துள்ளார் பார்த்தீர்களா! அசத்திட்டாரே!!

Summary:

நடிகை நிஹாரிகாவுக்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.1.50 கோடி மதிப்பிலான திருமண பரிசுகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் தம்பி நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா. இவர் தமிழில் விஜய் சேதுபதி மற்றும்  கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்  சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு  இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள உதய்விலாஸ் ஹோட்டலில் தொழிலதிபர் சைதன்யா வி.ஜே என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்தையொட்டி உதய்பூருக்கு கிளம்புவதற்கு முன்பு ஐதராபாத்தில் நேற்று முன்தினம் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

நிஹாரிகா, சிரஞ்சீவி

அப்பொழுது முன்னணி நடிகரும், நடிகை நிஹாரிகாவின் பெரியப்பாவுமான சிரஞ்சீவி அவருக்கு ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நிஹாரிகா சிறு வயதில் இருந்தே நடிகர் சிரஞ்சீவியின் செல்லமாம். அதனால் அவருக்கெனவே சிரஞ்சீவி பிரத்யேகமாக அந்த நகைகளை செய்துள்ளார் என கூறப்படுகிறது.


Advertisement