மகளிர் தினத்தில் கவிதையாக வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து.! கடுமையாக விளாசி பாடகி சின்மயி பதில்!!

மகளிர் தினத்தில் கவிதையாக வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து.! கடுமையாக விளாசி பாடகி சின்மயி பதில்!!


chinmayi-tweet-to-vairamuthu-womens-day-wish

மார்ச் 8 நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பிரபலங்கள், நெட்டிசன்கள் பலரும் மகளிர்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் பாடலாசிரியரான வைரமுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவிலான பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர், 
“மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து” என வாழ்த்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு எதிராக பதிலளிக்கும் வகையில் பாடகி சின்மயி, அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண். பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்: நியாயம் கேட்கிறாள் என குறிப்பிட்டு, இவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து எப்படி பேசுகிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.