விஸ்வாசம் படத்தை இப்போதான் பார்த்தேன்.! பிரபலம் கூறியதை கேட்டு ரசிகர்களின் ரியாக்ஷனை பார்த்தீர்களா!!chinmayi talk about viswasam movie

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது படங்கள் வெளியிடும் நாட்களில் ரசிகர்கள் திருவிழா போல மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விஸ்வாசம். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

nerkonda parvai

மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள அன்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு குடும்பத்தார்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது. பாடல்களும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது. 

மேலும் அஜித்தின் அடுத்த படமான நேர்கொண்ட பார்வை தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஸ்வாசம் படத்தை இப்போதுதான் பார்த்தேன். இந்த படம் எனது மனதை பெருமளவில் கவர்ந்தது. மேலும் இந்த படம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது என பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் விஸ்வாசம் படம் வந்த 7 மாதங்களுக்கு பிறகு இப்போதான் பார்த்தீர்கள் என்றால் நேர்கொண்ட பார்வையை எப்பொழுது பார்ப்பீர்கள் என கிண்டல் செய்து கேட்டுள்ளனர்.