சினிமா

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டீர்களா.! நச்சரித்த ரசிகர்களுக்கு பாடகி சின்மயி பதிலடி!!

Summary:

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளா.? நச்சரித்த ரசிகர்களுக்கு பாடகி சின்மயி பதிலடி!!

தமிழ் திரையுலகில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.  அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். சின்மயி பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் உள்ளார்.

இவர் நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் எட்டு ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த அவர் தற்போது ஒரு பெண்குழந்தை மற்றும் ஆண்குழந்தை என இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாகியுள்ளார். இந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

மேலும் அவர் கர்ப்பமாக இருந்த புகைப்படங்கள் ஒன்றைக்கூட வெளியிடாத நிலையில், அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு பதிலளித்து சின்மயி வெளியிட்டுள்ள பதிவில், எனது நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே நான் கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரியும். பாதுகாப்பிற்காக நான் தெரிவிக்கவில்லை. சிசேரியன் மூலம் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது.  குழந்தை பிறக்கும் போது நான் பஜனை பாடல் பாடிக் கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.


Advertisement