குடிபோதையில் விபத்து.? குழந்தைகளுடன் காரில் சிக்கிய பாடகி சின்மயி.!

குடிபோதையில் விபத்து.? குழந்தைகளுடன் காரில் சிக்கிய பாடகி சின்மயி.!



chinmayi-post-about-accident

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இடம்பெற்ற இவரது பாடல்கள் பல ஹிட்டாகியுள்ளது.

chinmayi

மேலும் சமீபத்தில் திரைத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையாக கிளம்பியது. இதனையடுத்து மீ டு என்ற ஹாஸ் டேக் மூலம் பிரபல கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றம் சாட்டினார்.

இது போன்ற நிலையில், தொடர்ந்து பல பாடகிகளும் வைரமுத்துவின் மீது குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் இவருக்கு தற்போது திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

chinmayi

தற்போது சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அப்பதிவில் "குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள். பெரும் விபத்தில் சிக்கியிருப்பேன். குழந்தைகளுடன் உயிர் தப்பியது பெரிய விஷயம்" என்று கூறியிருக்கிறார். தற்போது இப்பதிவு வைரலாக வருகிறது.