சினிமா

இதெல்லாம் பணத்திற்காக செய்கிறார்களா, இல்லை சும்மா செய்கிறார்களா! பாடகி சின்மயின் கோபமான பதிவு!

Summary:

Chinmayi latest update

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் "மீடூ" மூலமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவ்வாறு அவர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இருப்பினும் நெட்டிசன்கள் பலர் இவருக்கு எதிராக சண்டை போடுவது, இவர் கூறும் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிப்பது எனவும், இன்னும் சிலர் இவரை மிகவும் ஆபாசமாக தீட்டுவது போன்ற செயலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது பாடகி சின்மயி நித்தியானந்தாவுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகின்றனர். அப்புகைப்படம் உண்மையில்லை எனவும் மார்பிக் செய்து யாரோ வெளியிட்டு உள்ளனர் என சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் இவை அனைத்தும் சும்மா செய்தார்களா அல்லது பணம் வாங்கி கொண்டு செய்தார்களா என கோபமாக கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார். 


Advertisement