சினிமா

அது போலி புகைப்படம்! நடந்தது இதுதான்! பரபரப்புடன் தெளிவான விளக்கமளித்த பாடகி சின்மயி! வைரலாகும் பதிவு!

Summary:

chinmayi explain tweet on fake photo

தமிழ் சினிமாவின்  பிரபலமான பாடகிகளில் ஒருவர் சின்மயி. இவரது குரலுக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் சின்மயி பாடுவதையும் தாண்டி, பல்வேறு படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அனைவரையும் அதிரவைக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் .

மேலும் MeToo என்ற ஹாஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக தொடரும் பல வன்முறைகள் மற்றும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். அதுதொடர்பாக பல பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகிறார். இதனால் சின்மயி மீது பெரும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகள் கிளம்பிவருகிறது.

CHINMAYI க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி நித்தியானந்தாவிடம் கோவிலில் பிரசாதம் வாங்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும்  பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போலி எனவும் இதற்கு விளக்கம் கொடுத்தும் சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 


Advertisement