வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை!. சின்மயி வெளியிட்ட நேரலை வீடியோ!.

வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை!. சின்மயி வெளியிட்ட நேரலை வீடியோ!.


chinmaiyi-live-video-on-facebook


வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என சின்மயி கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் சின்மயி தற்போது பேசியுள்ளார்:

அதில், வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. என் திருமணத்திற்கு தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. நேரடி அழைப்பு கொடுக்கவில்லை.

வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது. இந்த நிலையில் #METOO ஹேஸ்டேக்  மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை கூற தொடங்கியுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்,  நான் வெட்கப்பட மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட முகநூல் நேரலை வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.