சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்... முதல்வருக்கு ட்விட்டரில் வாழ்த்திய நெல்சன்.!chief-minister-stalin-watched-jailer-movie-director-nel

தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகி முதல் நாள் வசூலே 100 கோடியை நெருங்கி இருக்கிறது.

Kollywoodரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்த மாஸ் திரைப்படமாக இந்த திரைப்படம் வந்திருப்பதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் திரு முக.ஸ்டாலின் ஜெயிலர் திரைப்படத்தை கண்டுக்களித்துள்ளார்.

இது தொடர்பாக படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் தனது ட்விட்டரில் முதலமைச்சருக்கு நன்றியையும்  மகிழ்ச்சியையும் தெரிவித்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படம் பார்த்த மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி. உங்களின் வார்த்தைகளால் பட குழுவினர் மற்றும் நடிகர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.