சினிமா

அநியாயமா கொன்னுட்டாங்கம்மா! வயிறு எரியுது.. கோபத்தில் கொந்தளித்த நடிகர் சேரன்! ஏன் தெரியுமா?

Summary:

Cheran tweet about rajavukku check movie on prime

தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் சேரன். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும்  வரவேற்பை பெற்றது. மேலும் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து ஏராளமான படங்களை  நடித்து,  இயக்கிய அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் அவருடன் சிருஷ்டி டாங்கே, சாரயு, நர்மதா பர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைமில்  இடம்பெற்றிருந்தது. இப்படத்தை அமேசானில் பார்த்த ரசிகை ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் திரில்லர் என்டர்டைன்மென்ட் படம் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதனைக்கண்ட நடிகர் சேரன் ஆவேசமாகி,  அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை... எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.... அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க... வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு.. என  பதிவிட்டுள்ளார். இதற்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement