விஜய்சேதுபதி சொன்ன அந்த இருகாரணத்தால்தான் நான் பிக்பாஸ் வீட்டிற்கே வந்தேன்.! ரகசியத்தை போட்டுடைத்த சேரன்!!
பிக்பாஸ் சீசன்3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லபோகும் பிரபலம் யார் என அறிந்துகொள்ள பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, லாஸ்லியா, முகேன் மற்றும் ஷெரின் மட்டுமே இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து பிரபலமான இயக்குனர் சேரன். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். மேலும் இளைஞர்களுக்கு இணையாக தன்னால் முடிந்தவரை கடுமையாக போராடி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஒரு சில வாரத்திற்கு முன்பு குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
அதனை தொடர்ந்து சேரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், விஜய் சேதுபதி என்னை பிக்பாஸ் வீட்டிற்குப் போகச் சொன்னது உண்மைதான். நான் அவரை வைத்து படம் இயக்க தயாரானபோது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து நான் அவரிடம் கூறியபோது அவர்தான் என்னை பிக்பாஸில் கலந்துகொள்ளுமாறு கூறினார்.
மேலும் சில ஆண்டுகளாக நீங்கள் அதிக படங்கள் எதுவும் எடுக்காததால் இப்போதைய இளைஞர்களுக்கு உங்களை குறைவாகத்தான் தெரியும், ஆனால் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் மீண்டும் உங்களைப அனைவருக்கும் தெரியவரும்.அதுமட்டுமின்றி உங்களுக்கும் பல அனுபவங்கள் கிடைக்கும். அதை நீங்கள் மக்களுக்கு கூறலாம் என்றார். விஜய் சேதுபதி கூறிய அந்த இருகாரணத்தாலேயேதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன். மேலும் விரைவில் நான் அவரை வைத்து படம் இயக்குவேன் என்றும் கூறியுள்ளார்.