புதிய முயற்சியில் களமிறங்கிய பிக்பாஸ் சேரன்! குவியும் வாழ்த்துகள்..!

புதிய முயற்சியில் களமிறங்கிய பிக்பாஸ் சேரன்! குவியும் வாழ்த்துகள்..!


Cheran started new YouTube channel

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் சேரன். இவர் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

அதனை தொடர்ந்து சில நாட்கள் சினிமாவிலிருந்து விலகியிருந்த சேரனுக்கு பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் தற்போது புதிதாக வால் போஸ்டர் என்ற யூடியூபில் சேனல் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Youtube

மேலும் அந்த புதிய சேனல் குறித்து சேரன் பதிவிட்டதாவது பல்வேறு இளைஞர்களின் திறமையை வெளியே கொண்டுவருவதற்காக முதலில் தினமும் செய்திகளோடு விரைவில் துவங்குகிறோம்.. தொடர்ந்து பன்முகத்தன்மையோடு வளரும்... ஆதரவை கொடுத்து வளர்க்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

சேரனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.