சினிமா பிக்பாஸ்

லாஸ்லியாவை கட்டாயப்படுத்தி கவின் செய்த காரியம்.! கடுப்பாகி சேரன் எடுத்த முடிவால் பரபரப்பில் பிக்பாஸ் வீடு!!

Summary:

cheran send letter for kavin

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். 

கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார். 

Image result for losliya with kavin

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது கவின் மற்றும் லாஸ்லியா காதல் விவகாரம். இதனால் ரசிகர்கள் பலரும் மோசமான விமர்சனங்களை கூறிவந்தனர். மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலரே இதனால் கடுப்பாகி பெரும் கோபம் கொண்டனர். இந்நிலையில் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது எதுவாக இருந்தாலும் வெளியில் சென்று பேசிக் கொள்ளலாம். பொறுமையாக இருங்கள் என்று கூறிவிட்டு சென்றார். 

இந்நிலையில் தற்போது கவின் லாஸ்லியாவிடம் தனது முடிவை இங்கேயே கூறுமாறு வற்புறுத்தியுள்ளார் . இதனை சீக்ரெட் ரூமில் இருந்து கண்ட சேரன் கடுப்பாகி நான்தான் அப்பொழுதே சொன்னேனே இப்படி செய்யலாமா என கோபத்துமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை தர்ஷன் அனைத்து போட்டியாளர்கள் முன்பும் படித்து காட்டியநிலையில் கவின் மிகவும் மிகவும் வருத்தத்தில் காணப்பட்டார். இந்த பிரமோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement