சினிமா

என்னை சேரப்பானு அழைக்காதீங்க! வெறுப்பில் பட்டென பதிலளித்த சேரன்! ஏன் தெரியுமா?

Summary:

Cheran said do not call me cherappa

ஏராளமான ஹிட் திரைப்படங்களின் இயக்குனரும், நடிகருமான சேரன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவுடன்  தந்தையைப் போல பழகி வந்தார். மேலும் லாஸ்லியாவும் சேரன் தனது அப்பாவை போல உள்ளார் என கூறி அவருடன் பாசமாக பழகிவந்தார்.

மேலும் அவர் நடிகர்  சேரனை எப்பொழுதும் சேரப்பா என்று மிகவும் அன்பாக அழைத்து வந்தார். தனது மகிழ்ச்சி, கஷ்டம் அனைத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையிலேயே லாஸ்லியாவிற்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சர்ச்சைகள் கிளம்பியது.  அப்பொழுதெல்லாம் சேரன் ஒரு தந்தையைப் போல லாஸ்லியாவிற்கு  அறிவுரை வழங்கி வந்தார். மேலும் சேரன் குறித்து பேசினால் கவினும் மிகுந்த கோபமடைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் அவரை ஐ லவ் யூ  சேரப்பா என்று அழைத்திருந்தார். 
அதற்கு சேரன், தயவு செய்து என்னை சேரப்பா என்று அழைக்காதீர்கள். அது பெரிய பேரப்பா. அந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. என்னை சேரன் அல்லது சேரன் சார் என்று அழைத்தால் போதும் என்று பதிலளித்துள்ளார்.


Advertisement