சினிமா

நடிகர் சேரன்தானா இது! கோட் சூட், துப்பாக்கினு செம ஸ்டைலா மிரட்டுறாரே! வைரலாகும் மாஸ் புகைப்படங்கள்!!

Summary:

நடிகர் சேரன்தானா இது! கோட் சூட், துப்பாக்கினு செம ஸ்டைலா மிரட்டுறாரே! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் உணர்வுபூர்வமாக, மிகவும் யதார்த்தமான ஏராளமான திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வந்தவர் சேரன். துவக்க காலத்தில் திரையுலகில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த சேரன் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். 

அதனைத் தொடர்ந்து அவர் பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் என அருமையான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். மேலும் அவர் இயக்குனராக மட்டுமின்றி ஆட்டோகிராப், பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

மேலும் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் சேரன் நடித்துள்ளார்.  இந்த நிலையில் நடிகர் சேரனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது. அதில் அவர் கோட் சூட், கையில் துப்பாக்கி என செம மிரட்டலாக உள்ளார்.


Advertisement