அப்போதான் விடிவுகாலம் பிறக்கும்.. தமிழக அரசுக்கு சேரன் விடுத்த வேண்டுகோள்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

அப்போதான் விடிவுகாலம் பிறக்கும்.. தமிழக அரசுக்கு சேரன் விடுத்த வேண்டுகோள்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


cheran-ask-separate-ott-platform-for-tamil-movie

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டது. இந்த நிலையில் பெரிய, சிறிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக துவங்கியது. மேலும் பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இந்த நிலையில் மலையாள சினிமாவிற்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தை இயக்குனர் சேரன் வரவேற்றுள்ளார். மேலும் அதனைப் போலவே தமிழ் மொழிக்கும் தனி ஓடிடி தளம் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

Cheran

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். 
சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம் என பதிவிட்டுள்ளார்.