சினிமா

13 வருடங்கள் கழித்து மீண்டும் திரைக்கு வரும் தனுஷின் மெகா ஹிட் திரைப்படம்! எந்த படம் தெரியுமா?

Summary:

Chennai vetri theater screening dhanushs puthu pettai movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். நடிப்பு, பாடல், இயக்கம், தயாரிப்பு என அணைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் தனுஷ். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் சினிமாவிற்கு வந்த புதிதில் தனுஷை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிய திரைப்படம் புதுப்பேட்டை. தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

https://cdn.tamilspark.com/media/17217yx8-pudhupettai-3.png

இந்நிலையில் படம் வெளியாகி சுமார் 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் புது பேட்ட படத்தை திரையிடுகிறது சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம். வரும் ஞாயிறு மட்டும் படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 


Advertisement