மர்ம நபர் கவரில் வாங்கிக்கொடுத்த டீயை குடித்த 4 பேர் அடுத்தடுத்து மயக்கம் - வடபழனி கோவில் வளாகத்தில் பரபரப்பு.!Chennai Vadapalani Temple 4 Woman Injured

வடபழனி கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்த வயோதிகர்களுக்கு மர்ம நபர் கவரில் டீ வாங்கி கொடுத்ததாகவும், இதனைக்குடித்த 4 பேர் மயக்கம் அடைந்ததாகவும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள வடபழனியில் அமைந்துள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கனோர் வந்து சுவாமி தரிசன செய்வதுண்டு.

இந்நிலையில், வடபழனி முருகன் கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்த பெண்கள் உட்பட 4 வயோதிகர்களுக்கு மர்ம நபர் கவரில் டீ வாங்கிவந்து கொடுத்துள்ளார். அந்த டீயை இவர்கள் குடித்த நிலையில், அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் நால்வருக்கும் முதலுதவி செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விஷயம் குறித்த வீடியோ காணொளி ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விடீயோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்படுகிறது.