சினிமா வீடியோ

பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவா? தீயாய் பரவும் தகவல்! விளக்கமளித்து அவரது மகன் சரண் வெளியிட்ட வீடியோ!

Summary:

Charan video about spb health condition

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் எஸ்பிபி அவர்களின்  உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் பரவியது. இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இன்று பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிங் என வந்துள்ளதாகவும் சரண் கூறியதாக தகவல்கள் பரவியது. 

இந்நிலையில் இந்த தகவலை மறுத்து, எஸ்பிபியின் மகன் சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் எப்பொழுதும் வழக்கமாக மருத்துவர்களுடன் பேசிவிட்டுதான் அப்பாவின் உடல்நிலை குறித்து பேசுவேன். ஆனால், இன்று காலை முதல் அப்பாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற வதந்தி பரவி
வருகிறது. அப்பாவின் உடல்நலம் குறித்து மருத்துவமனையிலிருந்து என்னிடம் மட்டுமேதான் தகவல் சொல்லுவார்கள். அதைத்தான் நானும் ஊடகங்களில் கூறுவேன்.

அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதோ, இல்லையோ, அவரது உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது.அவர் செயற்கை சுவாசம், எக்மோ கருவிகளின் உதவியுடன்தான் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக அவர் நிலையாக உள்ளார் . தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள். மருத்துவர்களுடன் பேசிவிட்டு இன்று மாலை நான் தகவல் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

 

 


Advertisement