என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை..! வீடியோவை பொறுமையா பாருங்க.! சிரிப்புக்கு நாங்க கேரண்டி..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை..! வீடியோவை பொறுமையா பாருங்க.! சிரிப்புக்கு நாங்க கேரண்டி..!

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் வடிவேலு என பல நட்சத்திரங்களின் நடிப்பில், இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா மிக அருமையாக நடித்திருப்பார்.

பல வருடங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக உள்ள படங்களில் சந்திரமுகியும் ஓன்று. இந்த படத்தில் ரா ரா என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ஜோதிகா முழு சந்திரமுகிய மாறும்போது ரா ரா என்ற பாடலுக்கு நடிகர் வினித்துடன் சேர்ந்து நடனமாடியிருப்பார்.

தற்போது அந்த ரா ரா பாடல் சமூக வலைத்தளங்களில் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது. அதற்கு காரணம், நம்ம வீட்டு பிள்ளை படத்தில், டி.இமான் இசையில் வெளியான கும்முறு டப்பர கும்முறு டப்பர பாடலை ரா ரா பாடலுடன் இணைத்து நெட்டிசன்கள் செம ட்ரோல் செய்துள்ளன்னர். இந்த வீடியோ பார்க்கும்போது உங்களுக்கு நிச்சயம் சிரிப்பு வரும். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo