சினிமா

AR முருகதாஸ் இயக்கத்தில் சந்திரமுகி 2? சந்திரமுகி- 2 விரைவில் ஆரம்பம்..!!

Summary:

Chandramuki 2 director speech

சூப்பர் ஸ்டார் ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா நடிப்பில் இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது சந்திரமுகி திரைப்படம். இந்த படத்தை சிவாஜி ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜோதிகாவின் நடிப்பும், வடிவேலுவின் காமெடியும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என கூறலாம்.

இந்நிலையில் சந்திரமுகி 2 வை இயக்க தனக்கு விருப்பம் இருப்பதாக இயக்குனர் AR முருகதாஸ் தெரிவித்துள்ளார். தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கிவருகிறார் AR முருகதாஸ். இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இயக்குனர் வாசு அதிரடியாக  பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

சந்திரமுகி படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுத்தது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில் ஆயுத ரட்சகா என்ற பெயரில் இயக்கிவிட்டேன். படமும் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழில் இந்த கதையை ஒரு ஹீரோவிடம் சொல்லியிருக்கிறேன், மேலும், ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லிவிட்டேன்.

எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் சந்திரமுகி 2 படப்பிடிப்பை தொடங்குவேன் என இயக்குனர் பி. வாசு கூறியுள்ளார். ஆனால், சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


Advertisement