வேட்டையன் ராஜா பராக்.. சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வீடியோ வைரல்.!

வேட்டையன் ராஜா பராக்.. சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வீடியோ வைரல்.!



Chandramukhi 2 movie trailer release

கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஜோதிகா பிரபு நாசர் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது