அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்.? காரணம் என்ன.?
கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஜோதிகா பிரபு நாசர் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே சந்திரமுகி 2 படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளுக்கு இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என்பதால், ரிலீஸை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தை செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.