
சன் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை ப
சன் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சந்திரலேகா. இதில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் முக்கிய ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. சந்திரலேகா தொடர் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
ஆனால் ஸ்வேதா முதலில் கடந்த 2007ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தின் மூலமே சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அப்படத்தில் அவர் அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மறுமலர்ச்சி படத்தை இயக்கிய பாரதி இயக்கத்தில், சத்யா நடிப்பில் வெளிவந்த வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அவருக்கு பின்னர் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. துணை கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். மேலும் ஸ்வேதா ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னரே சந்திரலேகா தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
Advertisement
Advertisement