சினிமா

மூன்றாவது கணவர் பீட்டர் பாலை பிரிந்த வனிதாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! தேடிச் சென்று வாழ்த்திய விஜய் பட இயக்குனர்!!

Summary:

மீண்டும் ஹீரோயினாக அவதாரமெடுக்கும் வனிதாவுக்கு சந்திரலேகா பட இயக்குனர் நம்பிராஜன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்த அவர் பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்த நிலையில் வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

 இந்த நிகழ்ச்சியில் மோசமான விமர்சனங்களை பெற்ற வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் வின்னரானார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பேசுப்பொருளானார். மேலும் அதற்கேற்றார்போல் அவர் திருமணமான மூன்று மாதங்களிலேயே பீட்டர் பாலை  விவாகரத்து செய்து பிரிந்தார்.

இவ்வாறு தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்த வனிதா பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம்தாசனின் அனல் காற்று என்ற புதிய படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்தநிலையில் ஹீரோயினாகும் வனிதாவிற்கு சந்திரலேகா படத்தின் இயக்குனர் நம்பிராஜன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
 


Advertisement