சினிமா

தமிழ் சீரியல் வரலாற்றிலேயே முதன்முறையாக.. மாபெரும் சாதனை படைத்த சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்! கொண்டாடும் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சீரியல் வரலாற்றிலேயே முதன்முறையாக.. மாபெரும் சாதனை படைத்த சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்! கொண்டாடும் ரசிகர்கள்!!

அன்றைய காலம் தொடங்கி இன்றுவரை சன் தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். காலை தொடங்கி இரவு வரை சன் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன், மிகவும் விறுவிறுப்பாக ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 

அவ்வாறு ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்கு  ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் தொடர் சந்திரலேகா. கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் தொடங்கிய இத்தொடர் இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சந்திராவாக நடிகை ஸ்வேதா பண்டேகர் மற்றும் அவரது கணவராக ஜெய் தனுஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சந்திரலேகா தொடர் தற்போது 2000 எபிசோடுகளை தொட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல் வரலாற்றிலேயே முதன்முறையாக 2000 எபிசோடுகளை எட்டிய முதல் சீரியல் என்ற பெருமையையும் சந்திரலேகா தொடர் பெற்றுள்ளது. இதனை சீரியல் பிரபலங்களும், ரசிகர்களும் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.


Advertisement