படம் ரிலீஸாகும் முன்பே குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு.. கண்ணீருடன் பெற்றோர் எடுத்த முடிவு..!

படம் ரிலீஸாகும் முன்பே குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு.. கண்ணீருடன் பெற்றோர் எடுத்த முடிவு..!



Chalo show movie child actor passed away parents decision

தனது மகனின் படம் வெளியான பின்னரே அவனின் இறுதி சடங்கு நடைபெறும் என குழந்தை நட்சத்திரத்தில் பெற்றோர் அறிவித்துள்ளனர்.

குஜராத்தி இயக்குனர் பான் நீலன் இயக்கத்தில், நடிகர்கள் பாவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா, தீபன் ராவல் உட்பட பலர் நடித்து அக். 14ம் தேதி திரையில் வெளியாகவுள்ள திரைப்படம் செல்லோ ஷோ (Chhello Show). 

கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் Tribeca Film Festival-ல் ஒளிபரப்பப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ராகுல் கோலி (வயது 10) என்ற சிறுவன், இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தான். சிறுவனின் மறைவு குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

திரையில் வருவதற்கு முன்பே சாதனைகளை படைத்த செலோ படத்தின் வெளியீட்டுக்கு முன்பே சிறுவன் உயிரிழந்தான். சிறுவன் ராகுல் கோலியின் குடும்பம் ஏழ்மையானது. அவரின் தந்தை ரிக்சா ஓட்டுநர். இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் தங்களின் வாழ்க்கை மாறும் என்று அனைவரும் காத்திருந்த வேளையில், சிறுவனின் மரணம் நிகழ்ந்துள்ளது. 

இந்த நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதி திரைப்படம் வெளியான பின்னரே சிறுவனின் இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது பெற்றோர் அறிவித்திருக்கின்றனர்.