அட.. இது தெரியுமா? வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல முன்னணி சீரியல் நடிகை! செம சர்பிரைசில் ரசிகர்கள்!!

அட.. இது தெரியுமா? வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல முன்னணி சீரியல் நடிகை! செம சர்பிரைசில் ரசிகர்கள்!!


chaitra-reddy-act-in-valimai-movie

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, சுசித்ரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அசத்தலாக இசையமைத்துள்ளார்.

வலிமை படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த நிலையில், நேற்று வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

வலிமை டிரைலரில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இடம்பெற்றிருந்தார். அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கினர். இந்நிலையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் பயங்கர வில்லியாக நடித்திருந்த சைத்ரா ரெட்டியும் நடித்துள்ளார். அவர் தற்போது சன் டிவியில் கயல் தொடரில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Chaitra

இதுகுறித்து இதுவரை வெளியே சொல்லாத அவர் தற்போது வலிமை டிரைலரில் அவர் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து, 'இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார. அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.