சினிமா Deepavali News

இந்தவருடம் தலை தீபாவளி கொண்டாடும் நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?

Summary:

Celebrities list who are celebrating first deepavali today

பொதுவாக தீபாவளி என்றாலே புது உடை, இனிப்பு, புது திரைப்படம், வெடி என அன்றைய நாள் முழுவதும் களைகட்டும். இதில் புதிதாக திருமணம் ஆன தம்பதிகளான சொல்லவே தேவை இல்லை. தலைதீபாவளி என்ற பெயரில் அவர்களுக்கான கவனிப்பு மிகவும் பிரமாதமாக இருக்கும். அந்தவகையில் இந்த வருடம் தலைதீபாவளி கொண்டாடும் நட்சத்திர தமபதிகள் பற்றித்தான் நாம் இங்கே காண உள்ளோம்.

1. விராட் கோலி, அனுஷ்கா சர்மா:
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி விராட் மற்றும் அனுஸ்கா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இது இவர்களுக்கு முதல் தீபாவளி. அதாவது தல தீபாவளி.

2. ஆதவ் கண்ணதாசன்:
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேரன் ஆதவ் கண்ணதாசன், வினோதினி என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

3. சோனம் கபூர்:
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் இந்த ஆண்டு மே மாதம் தனது நண்பரும், காதலருமான ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்டார். இது இவர்களுக்கு தலை தீபாவளி.

4. பார்த்திபன் மகள் கீர்த்தனா
கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தனா. அந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது இவர்க்கு கிடைத்தது. இவர் பிரபல நடிகர் பார்த்திபனின் மகள் ஆவர். இவருக்கும் அக்ஷை என்பவருக்கும் டந்த மார்ச் மாதம் 8ம் தேதி  திருமணம் நடைபெற்றது.

5. ஸ்ரேயா சரண்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. புது முகங்களின் வருகையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் இவருக்கும் ஆண்ட்ரேய் கோஸ்ஷி என்பவருக்கும் கடந்த மே மாதம் 12ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

6. பாவனா:
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. ஜெயம் ரவி, தல அஜித் போன்றோருடன் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். கன்னட திரையுலக தயாரிப்பாளருமான நவீனை இந்த ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதம் 22ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

7. ஆதி:
ஹிப் ஹாப் ஆதி. பிரபல இசை கலைஞரான இவர் சமூக சம்மந்தமான காரியங்களிலும் அவ்வப்போது ஈடுபடுவது உண்டு. ஆதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார்.

8. நமீதா:
நமீதா பிக்பாஸ் சீசன் ஒன்று முடித்து வந்த கையோடு தனது திருமணம் வேலைகளில் இறங்கினார். இவர் தனது நண்பரான வீரா என்கிற வீரேந்திர சௌத்ரி என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார்.


Advertisement