சினிமா

சிவகார்த்திகேயனுடன் நடிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு

Summary:

casting selection for sk15

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 15 படத்தில் நடிப்பதற்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்று தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஷாலின் இரும்புத்திரை படத்தினை இயக்கிய இயக்குனர் மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். தற்போது இந்த படத்திற்கு எஸ்கே 15 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது பாதியில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்கு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தேவை என்ற விளம்பரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெறலாம்.இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் 6 முதல் எட்டு வயது நிரம்பிய மாநிறத்தில் உள்ள சிறுவன் மற்றும் 7 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 17 முதல் 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவ மாணவிகள் இந்த படத்தில் நடிக்க தேவைப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் என்ற CASTING.PROJECTSK15@GMAIL.COM மின்னஞ்சலில் தங்களை தகவல்களை அனுப்பி வைக்கலாம். 


Advertisement