தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக நடிகை சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களால் பெருமளவில் அறியப்பட்ட அவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சனம் ஷெட்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் போலீசாரிடம் அளித்த புகாரில், தர்ஷன் 2 ஆண்டுகளாக என்னை காதலித்து ஆசைகாட்டி, திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தமும் செய்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் தன்னை தொடர்ந்து மிரட்டிவருகிறார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அடையாறு அனைத்து மகளிர் போலீசார்கள் நடிகர் தர்ஷன் மீது நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தர்ஷன் கைது செய்யப்படுவாரா என ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. மேலும் சனம் ஷெட்டி தற்போது பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement