பாடலில் அநாகரிகமான ஆபாசமான வார்த்தைகள்!! கைது செய்யப்படுவாரா பிரபல பாடகர்?

பாடலில் அநாகரிகமான ஆபாசமான வார்த்தைகள்!! கைது செய்யப்படுவாரா பிரபல பாடகர்?



case-filed-on-singer-honeysingh

பிரபல பஞ்சாபி பாடகர் யோ யோ ஹனிசிங். இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் ரசிகர்களை கவரும்வகையில் ஏராளமான வீடியோ ஆல்பங்களையும் பாடியுள்ளார்.அதுமட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் ஹனிசிங் சமீபத்தில் மக்னா (Makhna) என்ற வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர் பாடிய பாடல்களில் பெண்களுக்கு எதிராக அநாகரிகமான  ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.  

honey singh

இந்நிலையில் இதுதொடர்பாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் ஹனிசிங்கிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியது.மேலும் இதுகுறித்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாடி என்பவர் கூறுகையில், ஹனி சிங் பெண்களுக்கு எதிரான ஆபாசமான, அநாகரிகமான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

அந்த பாடல் காட்சிகளும் ஏற்கும்படி இல்லை. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால், அந்த வார்த்தைகளை அனுமதிக்கும் நாடுகளுக்குத் தான் அவர் செல்ல வேண்டும்.மேலும் சர்ச்சைக்குரிய அந்த பாடல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  மாநில அரசு அந்தப் பாடலுக்கு தடை விதிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து  பஞ்சாப் போலீஸ் ஹனி சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.