இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது இந்த பிரபலத்தின் மருமகனா? வெளியான அதிர்ச்சி தகவல்! சோகத்தில் திரையுலகினர்!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது இந்த பிரபலத்தின் மருமகனா? வெளியான அதிர்ச்சி தகவல்! சோகத்தில் திரையுலகினர்!


cartoonist-madhan-son-in-law-dead-in-indian-2-accident

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் இவருடன் காஜல் அகர்வால் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக கிரேன்கள் மூலம் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

indian 2

இந்நிலையில் எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்து,  3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை தொடர்ந்து இதனிடையில்  உயிரிழந்த தயாரிப்பு உதவியாளரான மது மற்றும் கிருஷ்ணாவின் புகைப்படங்கள் வெளியானது. இதில் கிருஷ்ணா என்பவர் பிரபல நடிகர், விமர்சகர், கார்ட்டூனிஸ்ட் மதனின் மாப்பிள்ளை அதாவது மதனின் இளைய மகள் அமிதாவின் கணவர் என்பது தெரிய வந்துள்ளது. மதன், கிருஷ்ணா இருவரும் இணைந்து பல விளம்பரங்கள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான விளம்பர படங்களை இயக்கியுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.